புதன், 13 ஆகஸ்ட், 2014

தருப்பைப்புல் புண்ணியபூமி தவிர வேறு எங்கும் முளைக்காது.

தருப்பைப்புல்

தருப்பைப்புல் புண்ணியபூமி தவிர வேறு எங்கும் முளைக்காது. இதற்கு அக்னிகற்பம் என்பது பெயர். இப்புல்லில் கரமும் புளிப்பு இருப்பதால் செம்பு ஐம்பொன் உலோக படிமங்களை இந்த புல்லின் சாம்பலால் தெய்கிறார்கள் அவை பல நாள் ஒலிஉடனும் ஆற்றல் குறையாமல் இருக்கும். இந்த புல் தண்ணீர் இல்லாவிட்டால் வாடாது. நீருக்குள் பலநாட்கள் இருந்தாலும் அழுகாது. 'அம்ருத வீரியம்' என்பது இதன் பெயர். சூரிய கிரகணம் ஏற்படும் போது இதன் வீரியம் அதிகரிக்கும். தோற்று நோய்கள் இதன் காற்றுபடும் இடங்களில் இருக்காது 

இந்து மற்றும் புத்த சமயத்தில் தருப்பை பண்பாட்டு முதன்மைத்துவம் வாய்ந்த ஒரு புனிதத் தாவரமாகும். இது புத்தர் ஞான ஒளி பெறுவதற்காகத் தியானம் செய்வதற்கான ஒரு ஆசனமாகப் பயன்பட்டு வந்தது. ரிக் வேதத்தில்(Rig Veda) மதச் சடங்குகள் செய்யப்பயன்படும் ஒரு புனிதத் தாவரமாகத் தருப்பை குறிப்பிடப் படுகிறது. மேலும் இது துறவிகள், மத போதகர்கள் மற்றும் இறைவனுக்கான ஆசனமாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. பகவத் கீதையில் தியானம் செய்வதற்குச் சிறந்த ஆசனமாகக் கிருட்டிணனால் தருப்பையாசனம் பரிந்துரைக்கப்படுகிறது.

மேலும் அறிய இந்த லிங்க்கை அழுத்தவும் http://hindusamayams.forumta.net/t2095-topic#ixzz3AGyXCN48

கருத்துகள் இல்லை: